ஆக்லாந்தின் Upper Harbour நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை 18 இல் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

காலை 7.30 மணியளவில் Greenhithe இல் இந்த விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து கிழக்கு நோக்கிய இரண்டு பாதைகள் தடுக்கப்பட்டன.

இருப்பினும் காலை 9 மணியளவில் பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டதாக Waka Kotahi தெரிவித்தது.