Marlborough வில் மெத்தம்பேட்டமைன் (ஒரு வகை போதைப்பொருள்) தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று Picton மற்றும் Koromiko வில் உள்ள மூன்று முகவரிகளில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் மெத்தம்பேட்டமைன், கஞ்சா மற்றும் மின்னணு கருவிகள் உட்பட பல திருடப்பட்ட சொத்துக்களை மீட்டனர்.

இந்நிலையில் 53 வயதான ஆண் மீது 13 குற்றச்சாட்டுகள் மற்றும் 56 வயதான பெண் மீது 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் Koromiko வை சேர்ந்தவர்கள்.

இதனிடையே 37 வயதான Picton ஐ சேர்ந்த ஒரு நபர் 10 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் மற்றும் Picton ஐ சேர்ந்த 26 வயது நபர் மெத்தம்பேட்டமைன் விநியோகம் செய்ததாக 13 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

நால்வரும் இன்று Blenheim மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துப்பறியும் மூத்த சார்ஜென்ட் சியாரன் ஸ்லோன் கூறுகையில்...

நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்களை பொலிஸார் தொடர்ந்து குறிவைப்பார்கள்‌ என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இத்தகைய குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் அதை புகாரளிக்க முன்வர வேண்டும் என்றார்‌.