கடந்த மாதம் Lower Hutt இல் உள்ள மைக்கேல் ஹில் நகைக் கடையில் நகைகள் திருடப்பட்டதைத் தொடர்ந்து, 30 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 25ம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் 52,000 டாலர் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 30 வயதான அவர் நேற்றைய தினம் Hutt Valley மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவர் மீது திருட்டு மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதனையடுத்து ‌சிறையில் அடைக்கப்பட்ட அவர் எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.