North Island நகர்ப்புறமான Havelock North அருகே எரிந்த காரில் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை 10 மணியளவில் River வீதியில் எரிந்த குறித்த வாகனம் குறித்து இரண்டு நாட்களின் பின்னரே காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் ஒரு சடலம் மீட்கப்பட்டதாக ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த பகுதி பொதுமக்களுக்கு நேற்று மட்டும் மூடப்பட்டு, இன்று மதியம் மீண்டும் திறக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது மற்றும் இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.