மேற்கு ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Sunnyvale இல் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

இன்று மதியம் 1.20 மணியளவில் Wattle Rd இல் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் வழங்கப்பட்டதாக பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தபோது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவரைக் கண்டனர். அவரது கை மற்றும் கால்களில் துப்பாக்கிச் சூடு காயங்கள் காணப்பட்டன.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து அங்கு அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View வீதி, Wattle வீதி மற்றும் Awaroa வீதி ஆகியவை சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்புகொண்டு, P051797888 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.