Rotorua பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Pukehangi சாலையில் விபத்துக்குள்ளான குறித்த வாகனத்தில் இருந்த ஒரே ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நள்ளிரவு 12.30 மணியளவில் விபத்து குறித்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.