North Island நகர்ப்புறமான Waipu வின் தெற்கே ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

துப்பறியும் சார்ஜென்ட் டேவ் வில்கின்சன் கூறுகையில் Waipu Gorge சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை 12 ஆகியவற்றின் சந்திப்புகளுக்கு இடையே உடல் கண்டெடுக்கப்பட்டது.

இப்பகுதி Waipu வில் இருந்து 13 கிலோமீட்டர் தெற்கே உள்ளது என தெரிவித்தார்.

நேற்றைய தினம் காலை 9 மணிக்கு முன்னதாக அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன.

மேலும் விசாரணையாளர்கள் அந்த நபர் வாகனத்தால் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை Brynderwyn Summit மற்றும்  Artillery வீதி பகுதியில் இருந்த எவரும் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு வில்கின்சன் கூறினார்.

தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.