வெலிங்டன் இலவச ஆம்புலன்சில் இருந்து மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள் திருடப்பட்டுள்ளன.
 
Lower Hutt இல் ஒரு வெலிங்டன் இலவச ஆம்புலன்ஸ் நள்ளிரவு 12.11 மணியளவில் Waiwhetu சாலையில் உள்ள முகவரியில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது துணை மருத்துவர்கள் ஒரு நபருக்கு அங்கு சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தனர்.

மருத்துவப் பணியாளர்கள் அங்கிருந்து திரும்பி வந்தபோது ​​மருந்துப் பெட்டி, ஏர்வே கிட், ஆக்சிஜன் பேக் மற்றும் மருத்துவ காற்றுப் பை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் காணாமல் போனதை உணர்ந்தனர்.

திருடப்பட்ட மருந்துகள் ஆபத்தானவை மற்றும் தவறாக எடுத்துக் கொண்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று 
வெலிங்டன் இலவச ஆம்புலன்ஸ் சேவை எச்சரித்துள்ளது.

செயல்பாட்டு மேலாளர் எரிக் டிபோட் கூறுகையில்..

இந்த‌ பொருட்கள் சேமிப்பு பெட்டியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

இது அவசர சேவைக்கான முக்கிய உபகரணங்கள் என கூறினார்.

இச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த எவரும் தயவுசெய்து முன்வருமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று மூத்த சார்ஜென்ட் ரிச்சர்ட் பொட்டன் கூறினார்.

தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு 220902/9477 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளது