நெல்சன் மற்றும் Tasman பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலை இன்று பிற்பகல் முதல் நீக்கப்பட்டது.

நெல்சனில் Maitai நதி பெருக்கெடுத்தமை மற்றும் 350 க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகளைத் ஏற்படுத்திய கடுமையான வானிலை காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டது.

நெல்சனில் உள்ள மலைகளில் வீழ்ந்த மரங்களை அகற்றும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அந்த பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு குடிமைத் தற்காப்பு, மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பிளாக் ஹாக் என்று அழைக்கப்படும் சிகோர்ஸ்கி யுஎச்60 ஹெலிகாப்டர் இந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த பிளாக் ஹாக்கின் வருகை பலரின் ஆர்வத்தைத் தூண்டியதாக நெல்சன் டாஸ்மன் குடிமைத் தற்காப்புக் கட்டுப்பாட்டாளர் அலெக் லூவர்டிஸ் கூறினார்.

இந்த ஹெலிகாப்டர் 3.2 டன் எடையுள்ள பொருட்களை தூக்கும் திறன் கொண்டது.

இது இந்த மரங்களை அகற்றும் நடவடிக்கைக்கு ஏற்றது, நாங்கள் வழக்கமான இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது, அந்த பகுதி மிகவும் ஈரமாக உள்ளது, அது மிகவும் ஆபத்தானது மற்றும் பாதுகாப்பற்றது, எனவேதான் ஹெலிகாப்டரைப் பயன்படுத்துகின்றோம், வீழ்ந்த மரங்களை அகற்ற இன்றும் நாளையும் வேலை இது பணிபுரியும் என லூவர்டிஸ் கூறினார்.

இதுவரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நெல்சன் டாஸ்மன் மேயர் நிவாரண நிதிக்கு பாதி மில்லியன் டாலர்களுக்கு மேல்  வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 122,000‌ டொலர்கள் நிதி உதவி கிடைத்துள்ளதாக‌ நிதி ஒருங்கிணைப்பாளர் ஜிம் ஃப்ரேட்டர் தெரிவித்தார்.

இதனிடையே நெல்சன் சிட்டி கவுன்சில் இணையதளத்தில் மக்கள் நிதிக்கு நன்கொடை அளிக்கலாம்‌ என அவர் மேலும் தெரிவித்தார்.