Rotorua, Mission Bay அருகே இன்று ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலத்தை கண்ட ஒரு நபர் நள்ளிரவு‌ பொலிஸில் புகார் செய்தார்.

உத்தியோகபூர்வ அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை சடலத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த மரணம் தொடர்பாக விசாரிக்க மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என‌ பொலிஸார் தெரிவித்தனர்.