இன்று வெலிங்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் எவ்வித அத்துமீறல்களும் கைதுகளும் இடம்பெறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுதந்திரம் மற்றும் உரிமைகள் கூட்டமைப்பு மேற்கொண்ட இந்த போராட்டத்தில் சுமார் 1500 பேர் கலந்துகொண்டதாக காவல்துறை மதிப்பிட்டுள்ளது.

ஒரு அறிக்கையில், வெலிங்டன் மாவட்டக் கமாண்டர் கண்காணிப்பாளர் கோரி பார்னெல், காவல்துறையினரின் விரிவான திட்டமிடல், போராட்ட அமைப்பாளர்களுடன் தெளிவான தகவல் தொடர்பு மற்றும் கலந்துகொண்டவர்களின் நடத்தை ஆகியவற்றின் விளைவாக நேர்மறையான முடிவு கிடைத்ததாகக் கூறினார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டனர் மற்றும் மாலை 6 மணியளவில் சுற்றிவளைப்புகள் அகற்றப்படும் என்று கண்காணிப்பாளர் பார்னெல் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஏற்பட்ட இடையூறுகளை வெலிங்டன் சமூகம் புரிந்துகொண்டதற்காக காவல்துறை நன்றி தெரிவிக்க விரும்புகிறது எனவும் அவர் தெரிவித்தார்.