கடந்த வாரம் ஆக்லாந்தில் உயிரிழந்த 50 வயது முதியவரின் மரணம் இப்போது ஒரு கொலையாக கருதப்படுகிறது.

கெவின் பேட்ரிக் ஹே என்ற குறித்த நபர் Northcote இன் Ocean View சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

கடந்த செவ்வாய்கிழமை இரவு 10 மணிக்குப் பிறகு குறித்த முகவரிக்கு போலீசார் அழைக்கப்பட்டனர்.

அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து எதுவும் இருப்பதாக நம்பவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே இச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, 220817/9185 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கொள்ளப்படுகிறார்கள்.