நியூசிலாந்தில் இன்று 3693 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 35 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1841 ஆகும்.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 06 பேர் உட்பட 402 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நாட்டின் எல்லையில் 139 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.