வெலிங்டனில் இன்று பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிரான பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதை அடுத்து மத்திய வெலிங்டனில் உள்ள சில சாலைகள் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பாதுகாப்பு பணிக்காக வெளியில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

Destiny Church உடன் தொடர்புடைய ஒரு குழுவினரால் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் Destiny Church இன் தலைவரான பிரையன் டமாகி இந்த போராட்டத்தின் போது, தான் ஃப்ரீடம்ஸ் நியூசிலாந்து என்ற கட்சியை உருவாக்கியுள்ளதாகவும், அது ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட உள்ளதாகவும், இருப்பினும் அவர் அந்த கட்சி வேட்பாளராக நிற்கப் போவதில்லை என்றும் கூறினார்.