Gisborne இல் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றும் ஆக்லாந்தில் ஏற்பட்ட ஒரு விபத்தைத் தொடர்ந்து ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு கிஸ்போர்னில் உள்ள Mangapapa வில் Ormond சாலையில் ஏற்பட்ட குறித்த விபத்திற்கு இரவு 9.30 மணியளவில் அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக இன்று காலை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே ஆக்லாந்தின்  North Shore இல் உள்ள Albany வில் நேற்றிரவு 10.05 மணியளவில் கார் ஒன்று பாதசாரி மீது மோதியதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

Albany நெடுஞ்சாலை மற்றும் Oteha Valley வீதி சந்திப்பிற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதசாரி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.