ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Morningside இல் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்துக்கு ஆறு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

இன்று காலை 7.22 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் அவசரநிலை சேவைக்கு தகவல்  வழங்கப்பட்டது.

Western Springs சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

அதிர்ஷ்டவசமாக, வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

St John செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சம்பவ இடத்தில் மிதமான காயங்களுடன் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது‌ என‌ தெரிவித்தார்.