இந்த மாத தொடக்கத்தில் Lyttelton இல் நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கிறிஸ்ட்சர்ச் கண் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இயன் டாலிசன் என்ற 65 வயதான குறித்த மருத்துவர் நேற்றைய தினம் கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்நிலையில் கொலை முயற்சி, ஆயுதத்தை பயன்படுத்தி திருடுதல், சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் காயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 4 ஆம் திகதி இரவு 7.45 மணியளவில் St Davids தெருவில் உள்ள ஒரு வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தங்களுக்கு புகார் வந்ததாக காவல்துறை கூறுகிறது.

இச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கண் மருத்துவர் இன்னும் மூன்று வாரங்களில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.