அடுத்த வாரம் நியூசிலாந்து பாராளுமன்ற வளாகத்தைச் போராட்டங்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஆக்லாந்து மற்றும் கிறிஸ்ட்சர்ச்சில் சமீபத்திய போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய சுதந்திரங்கள் மற்றும் உரிமைகள் கூட்டணி, ஆகஸ்ட் 23 அன்று வெலிங்டனில் ஒரு போராட்டத்தைத் திட்டமிட்டுள்ளது.

மேலும் மற்றுமொரு குழுவொன்றும் பாராளுமன்றத்திற்கு அருகில் கூடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எந்தவொரு இடையூறுகளையும் சமாளிக்க ஆகஸ்ட் 21 அன்று இரவு 10 மணி முதல் பாராளுமன்ற மைதானத்தைச் சுற்றி சாலை மூடல் மற்றும் பார்க்கிங் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதன்போது பாராளுமன்ற மைதானத்தைச் சுற்றி அங்கீகரிக்கப்படாத வாகனங்கள் நிறுத்துவதை தடைசெய்யதல் போன்ற நடவடிக்கை போராட்டங்கள் முடியும் வரை அமல்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Lambton Quay, lower Molesworth தெரு மற்றும் Kate Sheppard Place இன் பாராளுமன்ற முனையில் சாலை மூடல்கள் இருக்கும்.

பயணிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அல்லது அந்தப் பகுதி வழியாகச் செல்பவர்கள் முன் கூட்டியே பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டாலும், போக்குவரத்து இடையூறுகள் குறைவாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

அமைதியான போராட்டத்திற்கு மக்களுக்கு உரிமை இருப்பது முக்கியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

இருப்பினும், சட்டவிரோத நடத்தைக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.