Invercargill இல் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

27 வயதான அந்த நபர், திங்களன்று Windsor தெருவில் இல் உள்ள ஒரு கடையில் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் புதன்கிழமை Centre தெருவில் உள்ள ஒரு கடையில் இடம்பெற்ற ஒரு மோசமான கொள்ளைக்கு காரணமானவர் என்றும் பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவங்களில் பயன்படுத்திய வாகனம் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டது உள்ளிட்ட மோசமான கொள்ளை வழக்குகளை எதிர்கொண்டு இன்று அவர் Invercargill மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அந்த நபர் இரண்டு திருடப்பட்ட வாகனங்கள் தொடர்பாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

புதன்கிழமையன்று இரவு வாகனங்கள் திருடப்பட்டதாக போலீசார் நம்புகிறார்கள்.

அவற்றில் ஒன்று வியாழக்கிழமை Bill Richardson டிரைவில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்திற்கு  பயன்படுத்தப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.