வெலிங்டனுக்கு வடக்கே Porirua என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் வீட்டில் ஏற்பட பாரிய தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தியுள்ளனர்.

இன்று பிற்பகல் 3.45 மணியளவில்  Mana Esplanade இல் உள்ள வீடு தீ விபத்துக்குள்ளானதை அடுத்து தீயணைப்பு பணியாளர்கள் அழைக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் அவசரநிலை மாற்ற மேலாளர் கரேன் மெக்டொனால்ட் உறுதிப்படுத்தினார்.

மாலை 5 மணிக்குள் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்த முடிந்தது என்று அவர் கூறினார்.

Johnsonville மற்றும் Porirua வில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆறு தீயணைப்பு வாகனங்கள் தளத்தில் உள்ளன.

இந்நிலையில் குறித்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய தீயணைப்பு ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

அவசரகால சேவைகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தபோது முன்னெச்சரிக்கையாக Mana View Rd மற்றும் Pascoe Ave இடையேயான சாலையை பொலிஸார் மூடிய நிலையில் வாகன ஓட்டுநர்கள் மாற்று பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.