தெற்கு ஆக்லாந்தின் புறநகர் பகுதியான Favona வில் அதிகாலையில் சாலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அதிகாலை 3.30 மணியளவில் Wakefield சாலையில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன.

குறித்த நபர் எப்படி இறந்தார் என்பதை நிறுவ விசாரணைகள் நடந்து வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும் சாலையில் காட்சி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது சாலை திறக்கப்பட்டுள்ளது.