வெலிங்டனில் இன்று சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் Kāpiti தீவுக்குப் பின்னால், Paraparaumu வில் இருந்து 25 கிமீ மேற்கே, 28 கிமீ ஆழத்தில் கடலில் மையம் கொண்டிருந்தது.

பத்து நிமிடங்களுக்குள் சுமார் 12,000 பேர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக ஜியோநெட்டில் தெரிவித்திருந்தனர்.

பெரும்பாலான பதிவுகள் வெலிங்டன் பிராந்தியம், South Island, Manawatū மற்றும் Taranaki மக்களிடமிருந்து வந்தவை.

இருப்பினும் ஆக்லாந்து மற்றும் ஒடாகோவில் உள்ள சிலர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர்.