இன்று காலை Hastings இல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Longlands இல் உள்ள Railway Road South என்ற இடத்தில் ஒரு கார் விபத்துக்குள்ளானதாக காலை 7.30 மணிக்கு முன்னதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் சாலை மூடப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.