நியூசிலாந்தின் முன்னாள் தேசிய பாராளுமன்ற உறுப்பினரான மேட் கிங், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பில் எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட பல பாராளுமன்ற எதிர்ப்பாளர்கள் எல்லைக்குள் நுழைந்தால் 1000 டொலர்கள் அபராதம் அல்லது இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்ற வளாகத்தல ஆக்கிரமித்த எந்தவொரு எதிர்ப்பாளர்களும் அடுத்த தேர்தல் முடியும் வரை பாராளுமன்ற மைதானத்திற்கு வர முடியாது என்று இந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால், இவ்வாறான அறிவிப்பிற்கு கட்டுப்பட மாட்டேன் என்று மேட் கிங் தெரிவித்துள்ளார்.