இன்று நியூசிலாந்தில் 20,087 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி ஆக்லாந்தில் 05 பேர், நோர்த்லேண்டில் 02 பேர், Bay of Plenty இல் ஒருவர், வெலிங்டனில் மூன்று பேர் இன்று உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தொற்றுகளில் ஆக்லாந்தில் 4122 பேரும், நோர்த்லேண்டில் 727 பேரும், வைகாடோவில் 1726 பேரும், Bay of Plenty இல் 1290 பேரும், Lakes இல் 505 பேரும், Hawke's Bay இல் 1064 பேரும், Mid Central இல் 919 பேரும், Whanganui இல் 388 பேரும், தரணகியில் 679 பேரும், Tairawhiti இல் 339 பேரும், Wairarapa வில் 276 பேரும், Capital and Coast இல் 1259 பேரும், Hutt Valley வில் 720 பேரும், Nelson Marlborough வில் 584 பேரும், Canterbury இல் 3468 பேரும், South Canterbury 319 பேரும், தெற்கில் 1631, West coast இல் 56 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 31 பேர் உட்பட 960 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 34 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 517,495 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 194 முதல் டோஸ்கள், 388 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 3972 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 208 முதல் டோஸ் மற்றும் 4028 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.