இன்று பிற்பகல் டாஸ்மானின் (Tasman) Upper Moutere இல் ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பிற்பகல் 3.50 மணியளவில் Gardner Valley சாலை மற்றும் Coastal நெடுஞ்சாலையின் சந்திப்புக்கு அருகில், மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக காவல்துறை அழைக்கப்பட்டது.

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் பலர் தீவிரமான காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதனையடுத்து தீவிர விபத்துப் பிரிவு சம்பவ இடத்தை ஆய்வு செய்கின்ற நிலையில் ​​சாலை மூடப்பட்டு மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்து அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.