கடந்த சனிக்கிழமை Upper Hutt பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான தாக்குதல் சம்பவம் தொடர்பில் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதத்தால் தாக்கியதாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் நாளை Hutt Valley மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான நபர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7:40 மணி முதல் 8:40 மணி வரை Caltex Rimutaka Fergusson Drive  பகுதியில் இருந்தவர்களிடமோ அல்லது டாஷ் கேமரா அல்லது வீட்டில் சிசிடிவி காட்சிகளை வைத்திருக்கும் எவரிடமும் இருந்து பொலிஸார் தகவல்களை முறையிடுகின்றனர்.

எனவே சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், 105 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, 220320/3075 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.