இன்று நியூசிலாந்தில் 14,463 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 09 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி ஆக்லாந்தில் 5 பேர், Bay of Plenty இல் ஒருவர், Wairarapa இல் ஒருவர் மற்றும் வைகாடோவில் இருவர் இன்று உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 3279 பேரும், நோர்த்லேண்டில் 422 பேரும், வைகாடோவில் 1401 பேரும், Bay of Plenty இல் 893 பேரும், Lakes இல் 457 பேரும், Hawke's Bay இல் 796 பேரும், Mid Central இல் 657 பேரும்,  Whanganui இல் 209 பேரும், தரணகியில் 473 பேரும், Tairawhiti இல் 259 பேரும், Wairarapa வில் 222 பேரும், Capital and Coast இல் 951 பேரும், Hutt Valley வில் 583 பேரும், Nelson Marlborough வில் 404 பேரும், Canterbury இல் 2,267 பேரும், South Canterbury இல் 191 பேரும், தெற்கில் 950, West coast இல் 39 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 33 பேர் உட்பட 1000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 144 முதல் டோஸ்கள், 142 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 2244 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 217 முதல் டோஸ் மற்றும் 3177 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.