நேற்றிரவு Upper Hutt இல் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

ஒரு அறிக்கையில், இரவு 8.30 மணியளவில் Caltex Rimutaka இற்கு அருகே Fergusson Drive வழியாக இரண்டு பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு நபர் அவர்களை அணுகி ஆயுதத்தால் கடுமையாகத் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து ஒருவர் படுகாயமடைந்து அவசர அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் காணப்பட்டார்.

மற்றவர் மிதமான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இருவரும் முன்னதாக இரவு 7.50 மணியளவில் பொலிஸாரை தொடர்புகொண்டு, தங்களைப் பெண் ஒருவர் பின்தொடர்ந்து, படம்பிடித்துக் கொண்டதாக புகாரளித்தனர்.

இந்நிலையில் "இந்த இரண்டு சம்பவங்களையும் நிறுவ நாங்கள் பணியாற்றி வருகிறோம்," என்று டிடெக்டிவ் மூத்த சார்ஜென்ட் டோட் கூறினார்.

தாக்குதலுக்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த பெண்ணை முன் வரும்படி பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் Caltex Rimutaka, Fergusson Drive பகுதியில் இரவு 7.40 மணி முதல் 8.40 மணி வரை இருந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த பெண் யார் என்று தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.