ஆக்லாந்தின் கிழக்கு டமாகியில் ஒரு முகவரியில் ஒருவர் காயமடைந்ததாகக் கிடைத்த புகாரைத் அடுத்து காவல்துறை சம்பவ இடத்திற்கு வருகை தந்தது.

இன்று அதிகாலை 01.40 மணியளவில் லேடி ஃபிஷர் பிளேஸில் உள்ள ஒரு வீட்டில் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

பொலிஸார் வந்தபோது குறித்த வீட்டில் யாரும் இல்லை ஆனால் சம்பவ இடத்தில் ரத்தம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் என்ன நடந்தது என்பதை கண்டறிய காட்சி ஆய்வு நடந்து வருகிறது.

எனவே நேற்று இரவு குறித்த வீட்டில் இருந்தவர்களிடமிருந்தோ அல்லது பொலிஸார் விசாரணைகளுக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டவர்களிடமிருந்தோ காவல்துறை தகவல்களை பெற விரும்புவதாக காவல்துறை ஒரு அறிக்கையில் கூறுகிறது.

இந்நிலையில் 105 ஐ அழைத்து கோப்பு எண் 220320/3367ஐ மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் கவுண்டீஸ் மானுகாவ் குற்றப் பிரிவுக்கு (09) 2611321 என்ற எண்ணில் அழைப்பதன் மூலமும் தகவல்களை வழங்கலாம் என காவல்துறை தெரிவிக்கின்றது.