Northland இல் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சூறாவளி வீசுவதற்கான சாத்தியம் உள்ளதால், வாகன ஓட்டிகள் இன்று சாலைகளில் கவனம் செலுத்துமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

Metservice இப்பகுதியில் கடுமையான இடியுடன் கூடிய மழைக்கான கண்காணிப்பை வெளியிட்டுள்ளது.

இது ஒரு மணி நேரத்திற்கு 15 முதல் 25 மில்லிமீட்டர் வரை பலத்த மழையை ஏற்படுத்தக்கூடும் மற்றும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என MetService தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் முதல் திங்கட்கிழமை காலை வரை Northland இல் காற்று, இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை ஆக்லாந்து மற்றும் கிரேட் பேரியர் தீவை இன்று இரவு 10 மணி முதல் தாக்கும்.

அது திங்கட்கிழமை காலை 6 மணி முதல் Coromandel Peninsula வை தாக்கி, சில மணிநேரங்களுக்குப் பிறகு ஓபோடிகிக்கு மேற்கே ப்ளென்டி விரிகுடாவிற்குச் சென்று, இறுதியாக கிஸ்போர்னுக்குச் செல்லும்.

வாகன ஓட்டிகள் வெள்ளம் மற்றும் சரிவுகள் குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் சூறாவளி மரங்களையும் சேதப்படுத்தலாம்.

வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு சிவில் பாதுகாப்பு துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.