இன்று நியூசிலாந்தில் 12,020 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 09 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி ஆக்லாந்தில் நான்கு பேர், Bay of Plenty 03 பேர், Capital and Coast இல் ஒருவர் மற்றும் வைகாடோவில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 2768 பேரும், நோர்த்லேண்டில் 416 பேரும், வைகாடோவில் 1093 பேரும், Bay of Plenty இல் 804 பேரும், Lakes இல் 330 பேரும், Hawke's Bay இல் 676 பேரும், Mid Central இல் 540 பேரும்,  Whanganui இல் 169 பேரும், தரணகியில் 373 பேரும், Tairawhiti இல் 210 பேரும், Wairarapa வில் 146 பேரும், Capital and Coast இல் 795 பேரும், Hutt Valley வில் 443 பேரும், Nelson Marlborough வில் 308 பேரும், Canterbury இல் 1897 பேரும், South Canterbury இல் 171 பேரும், தெற்கில் 840, West coast இல் 22 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 26 பேர் உட்பட 957 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் 26 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 482,078 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 222 முதல் டோஸ்கள், 407 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 5201 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 544 முதல் டோஸ் மற்றும் 7581 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.