இன்று நியூசிலாந்தில் 18,514 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 4346 பேரும், நோர்த்லேண்டில் 643 பேரும், வைகாடோவில் 1729 பேரும், Bay of Plenty இல் 1221 பேரும், Lakes இல் 541 பேரும், Hawke's Bay இல் 1108 பேரும், Mid Central இல் 847 பேரும்,  Whanganui இல் 273 பேரும், தரணகியில் 601 பேரும், Tairawhiti இல் 365 பேரும், Wairarapa வில் 260 பேரும், Capital and Coast இல் 1237 பேரும், Hutt Valley வில் 697 பேரும், Nelson Marlborough வில் 457 பேரும், Canterbury இல் 2694 பேரும், South Canterbury இல் 217 பேரும், தெற்கில் 1224, West coast இல் 42 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 24 பேர் உட்பட 939 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் 45 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 470,097 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 264 முதல் டோஸ்கள், 478 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 5568 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 386 முதல் டோஸ் மற்றும் 5612 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.