இன்று நியூசிலாந்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில் 446 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 340 பேரும், வைகாடோவில் 48 பேரும், Bay of Plenty இல் 14 பேரும், தரணகியில்  ஒருவரும், Hutt Valley வில் 07 பேரும், Lakes இல் 13 பேரும், Capital and Coast இல் 04 பேரும், நோர்த்லேண்டில் 16 பேரும் மற்றும் தெற்கில் 03 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தலில் 32 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 18,936 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம்  695 முதல் டோஸ்கள், 1519 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 50,472 பூஸ்டர் டோஸ்களும், 2041 குழந்தைகளுக்கான டோஸ்களும் வழங்கப்பட்டன.