இன்று நியூசிலாந்தில் 188 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 117 பேரும், வைகாடோவில் 15 பேரும், Bay of Plenty இல் 20 பேரும், Tairawhiti இல் ஒருவரும், Hutt Valley வில் ,02 பேரும், Hawke's Bay இல் ஒருவரும், Mid Central இல் ஒருவரும், நோர்த்லேண்டில் 16 பேரும், Canterbury இல் 03 பேரும், Lakes இல் 12 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் உட்பட 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமூகத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்பட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 13,266 ஆகும்.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 17,612 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 24,935 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 1706 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் குழந்தைகளுக்காக இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 199,174 ஆக அதிகரித்துள்ளது.