இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறைக்குத் திரும்பத் தவறிய ஆபத்தான கைதி‌ ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

24 வயதான மைக்கேல் டவுடாரி என்ற குறித்த கைதி ஆபத்தானவர் என்று கருதப்படுவதால், அவரை யாரும் அணுகக்கூடாது என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

அவர் சுமார் 165 சென்டிமீட்டர் உயரம், நடுத்தர-சிறிய உடலமைப்பு, அவரது இடது கன்னத்தில் ஒரு பெரிய கருப்பு டேட்டூ காணப்படும்.

நார்த்லேண்டில் உள்ள Kawakawa இல் ஒரு இறுதிச் சடங்கிற்குச் செல்வதற்காக தற்காலிகமாக சிறையிலிருந்து வெளியேற குறித்த நபருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆனால் அவர் சிறைக்கு திரும்பி வரவில்லை என்று சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், டவுடரியைப் பார்க்கும் எவரும் உடனடியாக 111 என்ற எண்ணை அழைக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.