நார்த் கேன்டர்பரியில் உள்ள Sutton Tools தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து சுமார் 2000 லிட்டர் எண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை தீ அணைக்கப்பட்ட பிறகு தொழிற்சாலையில் இருந்த நச்சு எண்ணெய் ருடானிவா ஆற்றில் கலந்தது.

எண்ணை கசிவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ருடானிவா (Ruataniwha), கையாபோய் மற்றும் வைமகாரிரி ஆறுகள் மற்றும் வைமகரிரி ஆறு கடலில் சந்திக்கும் இடத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய பல நாட்கள் ஆகலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் கேன்டர்பரி பிராந்திய ஆன்-சீன் கமாண்டர் எம்மா பார் கூறுகையில், ஆறுகளில் இருந்து சுமார் 1100 லிட்டர் எண்ணெய் மற்றும் தொழிற்சாலையின் கழிவு நீர் சேகரிக்கும் இடத்தில் இருந்து மேலும் 800 லிட்டர் எண்ணெய் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.

நாங்கள் இன்னும் இருநூறு லிட்டர் எண்ணை தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து பெற எதிர்பார்க்கிறோம்."

இதனிடையே வனவிலங்கு நிபுணர்கள் ஐந்து பறவைகள் எண்ணெயில் மூடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர், அவற்றில் ஒன்று கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கசிவின் விளைவாக மீன்கள் பாதிக்கப்படுவதாகத் தெரியவில்லை என்று எம்மா பார் கூறினார்.

மேலும் வார இறுதி வரை, எஞ்சியிருக்கும் எண்ணெய் அகற்றப்படும் வரை, மக்கள் குறித்த நதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.