இன்று நியூசிலாந்தில் 91 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 65 பேரும், வைகாடோவில் 17 பேரும், Hawke's Bay இல் 02 பேரும், வெலிங்டனில் ஒருவரும், Tairawhiti இல் ஒருவரும், Rotorua வில் 03 பேரும், Tauranga வில் ஒருவரும், நோர்த்லேண்டில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 39 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டில் நேற்றையதினம் 13,000 க்கும் மேற்பட்ட பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் 4200 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.