இன்வெர்கார்கிலில் (Invercargill) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளம் பெண் ஒருவரும் வாலிபர் ஒருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

இன்று அதிகாலை 1.10 மணிக்கு சென்டர் ஸ்ட்ரீட்டில் உள்ள முகவரிக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

இந்நிலையில் 17 வயது பெண் மற்றும் 16 வயது ஆணுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

பின்னர் அவர்கள் டன்னீடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பொலிஸார் குறித்த முகவரியில் தங்கி, காட்சி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.