நியூசிலாந்து நடிகர் பீட் ஸ்மித் தனது 63 ஆவது வயதில் காலமானார்.

80கள் மற்றும் 90களில் நியூசிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஒன்ஸ் வேர் வாரியர்ஸ், வாட் பிகம்ஸ் ஆஃப் தி ப்ரோக்கன் ஹார்டட் மற்றும் தி பியானோ உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் ஸ்மித் நடித்துள்ளார்.

1985 ஆம் ஆண்டில் அவரது முதல் திரைப்படமான தி குயட் எர்த் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகருக்கான NZ கில்ட் ஆஃப் ஃபிலிம் மற்றும் டெலிவிஷன் GOFTA விருது வழங்கப்பட்டது.

மேலும் ஷார்ட்லேண்ட் ஸ்ட்ரீட் உட்பட பல தொலைக்காட்சி தொடர்களிலும் ஸ்மித் நடித்துள்ளார், மேலும் மாவோரி தொலைக்காட்சிக்காக ஆவணப்படங்களையும் இவர் உருவாக்கினார்.

Te Rarawa மற்றும் Te Aupouri வம்சாவளியைச் சேர்ந்த ஸ்மித், சிறுநீரக நோயுடன் நீண்டகாலமாக போராடியதைத் தொடர்ந்து நேற்றைய தினம் தனது வீட்டில் காலமானார்.