இன்று நியூசிலாந்தில் 103 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நோர்த் ஷோர் மருத்துவமனையில் கொவிட் தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

70 வயதான குறித்த நோயாளி கடந்த 21 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் நோர்த்லேண்டில் 04 பேரும்,ஆக்லாந்தில் 56 பேரும், வைகாடோவில் 12 பேரும், Bay of Plenty இல் 14 பேரும், Rotorua வில் 08 பேரும், Hawke's Bay இல் 03 பேரும், Tairawhiti இல் ஒருவரும், Taranaki இல் ஒருவரும், MidCentral இல் ஒருவரும், Nelson Tasman இல் ஒருவரும், வெலிங்டனில் 02 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 15,910 ஆகும்.

நாட்டில் நேற்றையதினம் 764 முதல் டோஸ்கள் மற்றும் 30,146 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

நாட்டில் நேற்றையதினம் 9108 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.