பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெறுமாறு கட்சி மூத்தவர்கள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

கட்சியின் இளம் உறுப்பினருக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.நேற்று சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தேசிய பட்டியல் எம்.பி. பதவியை ரணில் கையகப்படுத்தக் கோரி கட்சி மூத்தவர்கள் கையெழுத்திட்டனர்.

 

எவ்வாறாயினும்,ஐக்கிய தேசிய கட்சியின் பல மூத்த உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்க மூத்த அரசியல்வாதி மற்றும் அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் தேசிய பட்டியல் ஆசனத்தை வெல்வதற்கான சிறந்த ஒருவர் என்று தெரிவித்தனர்.

 

கட்சித் தகவல்களின் படி, அவர் எதிர்வரும் டிசம்பரில் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராகி வருவதாகவும், ஜனவரி மாதத்திற்குள் புதிய தலைவரை நியமிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

கட்சியின் தற்போதைய துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தலைவராக நியமிக்கப்படலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.