New Lynn இல் நடந்த ஒரு கொள்கை சம்பவத்தில் தப்பியோடிய கார் ஓட்டுனரால் ஒரு காவல்துறை அதிகாரி  தாக்கப்பட்டதில் அவர் பலத்த காயங்களுடன் ஆக்லாந்து மருத்துவமனையில் உள்ளார்.

நேற்றைய தினம் இரவு 11 மணியளவில் கிரேட் நார்த் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்திற்கு பொலிஸார் வரழைக்கப்பட்டனர்.

இச் சம்பவத்தின் போது கார் ஒன்றில் தப்பிச் சென்றவர்களை அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றபோது கார் அதிகாரி மீது மோதியதில் படுகாயம் அடைந்தார்.

மேலும் கார் ஓட்டிச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காரில் இருந்து தப்பி ஓடிய அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே படுகாயமடைந்த அதிகாரி இன்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.