நியூசிலாந்தில் இன்று 182 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தீவிர சிகிச்சையில் 10 பேர் உட்பட 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் எல்லையில் மூன்று கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்றைய சமூக தொற்றாளர்களில் ஐந்து பேர் நோர்த்லேண்டிலும், 167 பேர் ஆக்லாந்திலும், 10 பேர் வைகாடோவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றில் 123 இன்னும் தொற்றுநோயியல் ரீதியாக இணைக்கப்படவில்லை.