லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றியை தம்வசப்படுத்தியுள்ளது.

 

அதன்படி கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

 

இந்தப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற காலி அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

 

அணிசார்பாக, டி பெல் ட்ரம்மன்ட் 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

 

பந்துவீச்சில், சந்தகன் மூன்று விக்கெட்டுகளையும் என்.துசார மற்றும் தனஞ்சய லக்ஷன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இத்துடன் , சஹன் ஆராச்சிகே மற்றும் எஸ்.ஜெயசூர்ய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 

இந்நிலையில், 151 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய காலி அணி 19.5 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இந்நிலையில் இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

 

அணிசார்பாக, பானுக ராஜபக்ஷ 33 ஓட்டங்களையும், தனஞ்சய லக்ஷன் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் செஹான் ஜெயசூர்ய 22 ஓட்டங்களையும் அஷாம் கான் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

 

பந்துவீச்சில், அசான் பிரியஞ்சன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் அஞ்சலோ மத்தியூஸ், துஷ்மந்த சமீர, குயிஸ் அகம்மட் மற்றும் திக்ஷில டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தனஞ்சய லக்ஷன் தெரிவுசெய்யப்பட்டார்.