ஐசிசி நடத்தும் உலககோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு உலகளவில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஒருநாள் தொடருக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது.

இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், பயிற்சி ஆட்டங்கள் தொடர்பாக அட்டவணை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே உலககோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மீனா உலககோப்பை அறிமுகம் செய்ததை தொடர்ந்து அவர் ஈபிள் டவர் முன்பு உலககோப்பையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விரைவில் நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.

இதுவரை எந்த இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமைக்குரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளேன் என்று நடிகை மீனா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் வித்தியாசாகர் மறைவுக்கு பின் அந்த துயர சம்பத்தில் இருந்து மீண்டு வரும் நடிகை மீனா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.