லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-இருபது தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்ஸ்கர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

 

அதன்படி ,காலி கிளாடியேற்றர்ஸ் அணியுடனானா இந்தப் போட்டி, அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.

 

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற காலி அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

 

அந்நிலையில், முதலில் களமிறங்கிய கண்டி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஐந்த விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

 

அணிசார்பாக, டெய்லர் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 49 ஓட்டங்களையும், கமின்டு மென்டிஸ் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

 

பந்துவீச்சில், சன்டகன் இரண்டு விக்கெட்டுகளையும், தனஞ்சய, அமிர் மற்றும் மொஹம்மட் சிராஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 

அந்நிலையில், பதிலுக்கு 197 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் 25 ஓட்டங்களால்தோல்வியடைந்தது.

 

காலி அணி சார்பாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஸ்க குணதிலக அதிகபட்சமான 82 ஓட்டங்களைப் பெற்றார்.

 

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பிரென்டன் டெய்லர் தெரிவுசெய்யப்பட்டார்.

 

அதேவேளை, லங்கா பிரீமியர் லீக் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள கண்டி அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

 

மேலும் அத்துடன், காலி அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.