சென்னையில் நடைபெற்ற மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அற்புதமாக பந்துவீசி அசத்தியுள்ளார்  ரசல். ஆட்டத்தின் பதினெட்டு மற்றும் இருபதாவது ஓவரை மட்டுமே அவர் வீசி இருந்தார். அதன் மூலம் வெறும் பன்னிரெண்டு பந்துகளில்  ஐந்து விக்கெட்டுகளையும் அவர் அள்ளியுள்ளார்.

 

 இது மும்பை அணிக்கு எதிராக ஒரு பவுலரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்துள்ளது. அதோடு கொல்கத்தா அணிக்கான சிறந்த பந்து வீச்சாகவும் பார்க்கப்படுகிறது. ஆட்டத்தின் போக்கையே மாற்றிய அந்த 12 பந்துகளில் கிட்டத்தட்ட 20 ரன்கள் வரை ரசல் கட்டுப்படுத்தியுள்ளார் என தெரியவருகிறது.