இலங்கை

இலங்கையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2000ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு சராசரி இறப்பு எண்ணிக்கை 140,000ஆக காணப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது 180,000ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டளவில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000ஆக காணப்பட்டது. இந்த நிலையில், அந்த தொகை தற்போது 280,000 வரை வீழ்ச்சிடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.