Christchurch City Mission இற்கு வெளியே 22 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் பிறகு Hereford தெருவில் உள்ள ஆண்கள் அவசரகால தங்குமிடத்தில் ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்டதாகப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

துப்பறியும் மூத்த சார்ஜென்ட் கிரேக் ஜான்சன் கூறுகையில், கத்தியால் குத்தப்பட்ட 22 வயதான இளைஞன் சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 67 வயது நபர் இன்று காலை Christchurch மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என அவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்